search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒருநாள் கிரிக்கெட் தொடர்"

    நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியா அணி வெற்றி பெற 244 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #NZvIND #TeamIndia
    மவுன்ட்மவுக்னி:

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது.

    இந்திய அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. காயம் காரணமாக டோனி ஆடவில்லை. அவருக்கு பதிலாக தினேஷ்கார்த்திக் இடம் பெற்றார். இதேபோல விஜய்சங்கர் இடத்தில் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்ததால் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த சஸ்பெண்டு நீக்கப்பட்டதால் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இதேபோல நியூசிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. கிராண்ட் ஹோமுக்கு பதிலாக சான்ட்னெர் இடம் பெற்றார்.

    நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ‘டாஸ்’ வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் நியூசிலாந்து அணி திணறியது.



    59 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 3 விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர் முன்ரோ 7 ரன்னில் முகமது ‌ஷமி பந்திலும், மற்றொரு தொடக்க வீரர் குப்தில் 13 ரன்னில் புவனேஷ்குமார் பந்திலும் ஆட்டம் இழந்தனர். நியூசிலாந்து கேப்டனும், உலகின் முன்னணி பேட்ஸ் மேன்களில் ஒருவருமான வில்லியம்சன் 28 ரன்னில் யசுவேந்திரசாஹல் பந்தில்‘அவுட்’ ஆனார்.

    4-வது விக்கெட்டான டெய்லர்- டாம்லாதம் ஜோடி விக்கெட் சரிவை தடுத்து பொறுமையுடன் விளையாடியது. அந்த அணி 25.5 ஓவரில் 100 ரன்னை தொட்டது.

    இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதத்தை எடுத்தனர். டெய்லர் 71 பந்தில் 4 பவுண்டரியுடன் 50 ரன்னும், லாதம் 68 பந்தில் 1 பவுண்டரி, 1 சிக்சருடன் 50 ரன்னும் எடுத்தனர்.

    இந்த ஜோடியை சாஹல் பிரித்தார். டாம் லாதம் 51 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 178 ஆக இருந்தது. 4-வது விக்கெட் ஜோடி 118 ரன் எடுத்தது. அடுத்து வந்த நிக்கோலசை 6 ரன்னில் பாண்ட்யா வெளியேற்றினார். அடுத்து வந்த சான்ட்னெர் 3 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் இருந்த ரோஸ் டெய்லர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அபாரமாக விளையாடி வந்த டெய்லர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 93 ரன்னில் முகமது‌ஷமி பந்தில் 7-வது விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். 106 பந்தில் 9 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். அப்போது ஸ்கோர் 222 ஆக (45.1 ஓவர்) இருந்தது.

    நியூசிலாந்து அணியின் எஞ்சிய 3 விக்கெட்டுகளும் எளிதில் விழுந்தன. அந்த அணி 49 ஓவர்களில் 243 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. இதனால் இந்தியாவுக்கு 244 ரன் இலக்காக இருந்தது. முகமது ‌ஷமி 3 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார், யசுவேந்திர சாஹல், ஹர்த்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    244 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா விளையாடியது. ரோகித்சர்மா, தவானின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. தவான் அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்டார்.

    அவர் 27 பந்தில் 28 ரன்னுடன் (6 பவுண்டரி) ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை போல்ட் கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 39 ரன்னாக (8.2 ஓவர்) இருந்தது.

    2-வது விக்கெட்டுக்கு ரோகித்சர்மாவுடன் கேப்டன் வீராட்கோலி ஜோடி சேர்ந்தார். #NZvIND #TeamIndia
    நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. #NZvIND #TeamIndia
    நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி, அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான், ரோகித் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். அரை சதம் கடந்த இருவரும், நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்து, ரன் குவித்தனர். ஷிகர் தவான் 66  ரன்களும், ரோகித் சர்மா 87 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலி 43 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தாலும், அம்பதி ராயுடு மற்றும் டோனி இருவரும் அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினர். ராயுடு 47 ரன்களில் ஆட்டமிழந்தார். டோனி அரை சதத்தை நெருங்கினார். 

    50 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் குவித்தது. கடைசி நேரத்தில் பந்துகளை பறக்கவிட்ட கேதர் ஜாதவ், 3 பவுண்டரி ஒரு சிக்சருடன், 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டோனி 48 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இதையடுத்து 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. துவக்கம் முதலே நியூசிலாந்து அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். அடித்து ஆட முற்பட்ட டாப் ஆர்டர் வீரர்கள், குறைந்த ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் அணியின் ரன் ரேட் சரியத் தொடங்கியது. அதன்பின்னர், குல்தீப் யாதவ் சீரான இடைவெளியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 166 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து.

    கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் அதிரடியாக ஆடிய பிரேஸ்வெல், பந்துகளை சிக்சரும் பவுண்டரிகளுமாக பறக்க விட்டு அரை சதம் கடந்தார். 46 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 57 ரன்கள் விளாசிய அவர், புவனேஸ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டான பெர்குசனை (12) சாகல் வீழ்த்த, நியூசிலாந்து அணி 40.2 ஓவர்களில் 234 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால், 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ரோகித் சர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

    இந்த வெற்றியின் மூலம், 5 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. 3வது போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.  #NZvIND #TeamIndia
    இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 324 ரன்கள் குவித்த இந்திய அணி, நியூசிலாந்தின் வெற்றிக்கு 325 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. #NZvIND
    நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது ஒரு நாள் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான், ரோகித் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். அரை சதம் கடந்த இருவரும், நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்து, ரன் குவித்தனர். ஷிகர் தவான் 66  ரன்களும், ரோகித் சர்மா 87 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அப்போது, அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்பிற்கு 172 ரன் என்ற வலுவான நிலையில் இருந்தது.

    அதன்பின்னர் களமிறங்கிய விராட் கோலி 43 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தாலும், அம்பதி ராயுடு மற்றும் டோனி இருவரும் அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினர். ராயுடு 47 ரன்களில் ஆட்டமிழந்ததார். டோனி அரை சதத்தை நெருங்கினார். 

    50 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் குவித்தது. கடைசி நேரத்தில் பந்துகளை பறக்கவிட்ட கேதர் ஜாதவ், 3 பவுண்டரி ஒரு சிக்சருடன், 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டோனி 48 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இதையடுத்து 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்குகிறது. #NZvIND
    சர்பிராஸ் அகமதுவின் இனவெறி பேச்சு குறித்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவருக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளது. #SarfrazAhmed #SAvPAK
    டர்பன்:

    பாகிஸ்தான்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் போட்டி டர்பனில் நடந்தது. இதில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 204 ரன் இலக்கை விளையாடிய தென் ஆப்பிரிக்கா 80 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்தது.

    பெலக்வாயோ- வான்டெர் துஸ்சென் ஜோடி அபாரமாக விளையாடி வெற்றி பெற வைத்தது. இந்த ஆட்டத்தின் போது பெலக் வாயோவை பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது இன வெறியுடன் பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. இது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



    இதற்கிடையே சர்பிராஸ் அகமது டுவிட்டரில் மன்னிப்பு கேட்டு உள்ளார். அதில் எனது பேச்சு மூலம் யாராவது மனம் புண்பட்டு இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் யாரையும் குறிப்பிட்டும் நேரடியாகவும் எனது வார்த்தைகளை கூறவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

    இந்த நிலையில் சர்பிராஸ் அகமதுவின் இனவெறியுடனான பேச்சு குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விசாரணை நடத்துகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தும். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சர்பிராஸ் அகமதுவுக்கு 4 முதல் 8 வரை சஸ்பெண்டு புள்ளிகள் வழங்கப்படும்.

    2 சஸ்பெண்டு புள்ளி பெறும் வீரருக்கு ஒரு டெஸ்ட் போட்டி அல்லது ஒரு நாள் போட்டிக்கு தடை விதிக்கும் வகையில் விதி உள்ளது. இதனால் சர்பிராஸ் அகமதுவுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. #SarfrazAhmed #SAvPAK
    இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. #INDvWI #ODI #ViratKohli
    கவுகாத்தி:

    ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

    இரு அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் போட்டி கவுகாத்தியில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் துவங்கியது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளது. #INDvWI #ODI #ViratKohli
    நேபாள கிரிக்கெட் அணி சர்வதேச அரங்கில் தனது முதல் ஒருநாள் தொடரில் வருகிற ஆகஸ்ட் மாதம் நெதர்லாந்துடன் விளையாட உள்ளது. #ICC #Nepal #ODIdebut #Netherlands

    ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்து அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தியதையடுத்து நேபாளத்துக்கு ஒருநாள் சர்வதேச அணி அந்தஸ்து கிடைத்தது.

    நெதர்லாந்து அணிக்கு 2022 வரை ஒருநாள் சர்வதேச அணி அந்தஸ்து ஏற்கெனவே பெற்றுவிட்டதால் நெதர்லாந்து அணியின் இந்த வெற்றி மூலம் ஹாங்காங் அணியைப் பின்னுக்குத் தள்ளி நேபாளம் ஒருநாள் கிரிக்கெட் அணி தகுதியைப் பெற்றது. அசோசியேட் அணிகளில் 3வது இடம் பிடித்ததால் நேபாளத்துக்கு இந்த ஒருநாள் சர்வதேச அணி அந்தஸ்து வழங்கப்பட்டது. நேபாளத்துக்கு 2022-ம் ஆண்டு வரை ஒருநாள் சர்வதேச அணி அந்தஸ்து கிடைத்துள்ளது.


    நேபாளம் பந்துவீச்சாளர் சந்தீப் லமிச்சானே 

    இதையடுத்து, சர்வதேச ஒருநாள் அந்தஸ்து பெற்றுள்ள நேபாளம், தனது முதல் சர்வதேச ஒருநாள் தொடரில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. வருகிற ஆகஸ்ட் 1 மற்றும் 3-ம் தேதிகளில் நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.  #ICC #Nepal #ODIdebut #Netherlands
    ×